இணை இயக்குனர் விசாரணை
நோயாளிகளுக்கு ஒரே ஊசி பயன்படுத்திய விவகாரம் :
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தனியார் கிளினிக்கில் நோயாளிகளுக்கு ஒரே ஊசி பயன்படுத்திய விவகாரத்தில் இணை இயக்குனர் விசாரணை மேற்கொள்ள மருத்துவ, ஊரக நலப்பணி இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட கிளினிக்கில் உரிய வசதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.