பீகாரில் வெப்ப அலையால் 19 பேர் உயிரிழப்பு
பீகாரில் வெப்ப அலை தாக்கத்தால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சுமார் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 40° Cக்கும் மேல் வெப்பம் அதிகரித்துள்ளதால் பலரும் ஹீட் ஸ்ட்ரோக்கால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.