தமிழ்நாடு அரசு
ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் : தமிழ்நாடு அரசு
ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதி காரணமாக பாமாயில், துவரம் பருப்புக்கான ஒப்பந்த புள்ளிகளை முடிவுசெய்து கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது.