மருத்துவமனை மீதான நடவடிக்கை ரத்து.
புதுச்சேரியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்பவர் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த விவகாரத்தில், பி.பி.ஜெயின் மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி அறுவை சிகிச்சை செய்த இவர் மறுநாளே உயிரிழந்தார்.
தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து மருத்துவமனை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.