அயலக தமிழர் நலத்துறை எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் தமிழக இளைஞர்களுக்கு அயலக தமிழர் நலத்துறை எச்சரிக்கை

கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து 83 தமிழர்களை மீட்டுள்ளதாகவும் தமிழக அரசு தகவல்

காம்போடியா, மியான்மர், தாய்லாந்து நாடுகளுக்கு ஐ.டி பணி என்ற பெயரில் சுற்றுலா விசாவில் அழைத்து சென்று சட்டவிரோத பணிகளில் ஈடுபடுத்துவதாகவும் எச்சரிக்கை

சட்டவிரோத இணையதள பணிகளை செய்ய மறுக்கும் இளைஞர்களை கடுமையாக துன்புறுத்துவதாகவும் எச்சரிக்கை

இளைஞர்களிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்லும் முகவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும் அயலக தமிழர் நலத்துறை அறிவுரை

லாவோஸ் நாட்டில் சுற்றுலா விசாவில் பணி புரிய முடியாது எனவும் குற்றங்களுக்கு 18 ஆண்டு சிறைத்தண்டனை எனவும் எச்சரிக்கை