நல்ல மருந்து…! நம்ம நாட்டு மருந்து தொடர் – 2

முருங்கையின் மருத்துவ குணங்கள் ஏராளம் அதன் பயன்களும் ஏராளம்…

முருங்கைக்கீரையை சமைப்பது பற்றி அனைவருக்கும் தெரியும்.
பெரும்பாலும் பொரியல் செய்வார்கள், மேலும் பருப்பு குழம்புடன் முருங்கை கீரையையும் சேர்ப்பார்கள்.

அதுபோல் முருங்கை பூவில் சில சுவையான ரெசிப்பி செய்வதைப்பற்றி நாம் பார்க்கலாமா…?

முருங்கை பூவில் சூப்பு, முருங்கை பூவில் கூட்டு, முருங்கைப்பூ பக்கோடா, முருங்கைப்பூ ரசம்.. என்ற வகைகளும் உண்டு.

முருங்கையில் எந்தப் பகுதியை எடுத்து எதைச் செய்தாலும் அவை அத்தனையும் சர்வ வல்லமை கொண்ட நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்ட மாமருந்தாக நமக்கு அது பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருவுற்ற தாய்மார்களுக்கு, பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

குழந்தையின் எலும்பு மற்றும் மூளை வளர்ச்சிக்கு முருங்கை சிறந்தது.

முருங்கைப் பூ மற்றும் கீரை இரண்டில் எதை வேண்டுமானாலும் பாலில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் நாள்பட்ட சளி, இருமல், மூக்கில் நீர் வடிதல், சைனஸ் போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.
இதை தொடர்ந்து பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றல் நமக்கு கூடுகிறது.

ஒரு கைப்பிடி அளவு பூ, அல்லது கீரையை 400 மில்லி தண்ணீருடன் ஐந்து நிமிடம் நன்கு கொதிக்கவைத்து, காலையில் ஒரு மண்டலம் அதாவது 48 நாள் பருகி வந்தால் சர்க்கரை வியாதி மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது உறுதி என்று மருத்துவம் கூறுகிறது.

வேகவைத்த முருங்கை பூ கீரையை வடிகட்டி அதை சாப்பிட்டு வந்தாலும் சிறந்த பயன்கள் உண்டு.

இனி வரும் தொடர்களில் மேலும் முருங்கையின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்.

எதையும் வருமுன் காப்போம்…!

நல்ல மருந்து….!
நம்ம நாட்டு மருந்து…!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119