பாடகி சுசித்ராவுக்கு இடைக்காலத் தடை!
நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்து:
நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடகி சுசித்ராவுக்கு எதிராக ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி கார்த்திக் குமார் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டது. தன்னை பற்றியும், தன் குடும்பத்தினர் பற்றியும் சுசித்ரா அவதூறு கருத்துகளை பேச தடைவிதிக்கவேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.