முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு மருத்துவப் பரிசோதனை
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு ராஜேஷ்தாஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். முன்னாள் மனைவி பீலா பண்ணை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது செய்யப்பட்டார்.