உலகப் பாவை தொடர் 12

  1. அறிஞர் ஒருமை அறிவார் அறிந்ததணு அளவே கல்வி; அறியாத(து) அண்டத் தெல்லை; அறிதோறும் அறியா மைதான் அவரவர்க்காம் அறிவின் எல்லை; அறிந்ததணு அளவா னாலும் அதில்தெளிவு மிளிரு மானால், உரிமையுடன் உலகோர்
    தம்மை
    ஒருமையுடன் நோக்கும்
    பார்வை தெளிவாகத் துளிர்க்கும்; தோன்றும்;
    சிந்தனைகள் அனைத்தும் மாந்தர்
    அறிவாலொன் றாகும் நாளை அளந்தறியத் துடித்து நிற்கும்;

அறிஞரவர் போல மாந்தர் அனைவருமே ஆதல் வேண்டி உரியவெலாம் அளந்து கூறி உலாவருவாய் உலகப் பாவாய்!

பேராசிரியர் முனைவர் மோகனராசு நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்