இளையராஜா vs மஞ்சுமல் பாய்ஸ்
தான் இசையமைத்து “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” பாடலை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி “மஞ்சுமல் பாய்ஸ்” பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா வக்கீல் நோட்டீஸ்
மலையாளத்தில் வெளியாகி தமிழத்திலும் கொண்டாடப்பட்டு வரும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில், நடிகர் கமல் நடித்து 1991ல் தீபாவளிக்கு வெளியான “குணா” படத்தின் “கண்மணி அன்போடு” என்ற பாடல் இடம்பெற்றிருந்தது
அனுமதியின்றி இந்த பாடலை பயன்படுத்தி உள்ளதாக கூறி, பதிப்புரிமை சட்டப்படி பாடலின் முழு உரிமையாளர் என்பதால், தன்னிடம் முறையாக உரிமம் பெற்று பாடலை பயன்படுத்த வேண்டும் அல்லது பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என நோட்டீஸ்
பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும், தவறினால், பதிப்புரிமையை மீறியதாகக் கருதி, உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வழக்கறிஞர் சரவணன் அனுப்பியுள்ள நோட்டீசில் எச்சரிக்கை
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பரவா பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள் சௌபின் ஷஹாஹிர், பாபு ஷஹாஹிர், ஷாவ்ன் அந்தோணி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது