முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தமிழர்கள் திருடர்களா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
முதல்வரின் எக்ஸ் சமூக வலைதளப் பதிவு:-
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது ‘தமிழ்ப்பற்றாளர்’ வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி!
ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.
வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் ஒரு பிரதமருக்கு அழகா?
வாக்குகளுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்!