தென்காசி குற்றாலத்தில் 3 அருவிகளில் சென்சார் கருவிகள் : புதிய முயற்சி
தென்காசி குற்றாலத்தில் உள்ள 3 அருவிகளில் சென்சார் கருவிகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய குற்றாலம், சிற்றருவி, பிரதான அருவி ஆகியவற்றில் சென்சார் கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி பேராசிரியர்கள் குழு அமைத்த சென்சார் கருவிகளை அருவிகளின் மேற்பகுதியில் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அருவிகளின் மேற்பரப்பில் ஐஐடி குழு தயாரித்த சென்சார் கருவிகள் ஓரிரு நாட்களில் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.