இலங்கை – காங்கேசன்துறை இடையே
இலங்கை – காங்கேசன்துறை இடையே மே 19-ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிப்பு
இலங்கை – காங்கேசன்துறை இடையே மே 19-ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு நாளை முதல் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழை அறிவிப்பு எதிரொலியாக நாகை இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி துவங்கப்பட்டது. செரியபாணி என்று பெயரிடப்பட்ட இந்த கப்பலில் கட்டணமாக ரூ.6,500 நிர்ணயம் செய்யப்பட்டு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூ.7,670 வசூலிக்கப்பட்டது.