தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

“பாஜக திட்டமிட்டு முஸ்லிம் வாக்குகளைச் சிதைக்க முயற்சிக்கிறது” : தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

வாக்களிக்க வந்த இஸ்லாமியப் பெண்களின் ஆதார் கார்டை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் செயலுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சனம் செய்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ““நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை, ஆனால் பாஜக திட்டமிட்டு முஸ்லிம் வாக்குகளைச் சிதைக்க முயற்சிக்கிறது, ஆனால் இந்த செயல்கள் அனைத்தும் பாஜகவுக்குப் பயனளிக்கப் போவதில்லை, மாற்றாக அசாதுதீன் ஒவைசிக்கு உதவப் போகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.