அமைச்சர் கீதா ஜீவன்
சமூக சீர்கேட்டைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் :
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திகளை தொடர்ந்து கேட்பது வருத்தமளிக்கிறது என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். உடுமலைப்பேட்டையில், 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் அளித்த பேட்டியில், முதலில் மிரட்டும்போதே புகார் அளித்திருந்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்த்திருக்கலாம்; சமூக சீர்கேட்டைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,”என்றார்.