800 வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருப்பேன்
800 வருடங்களுக்கு மேல் வாழ்ந்திருப்பேன்,
எல்லா உயிரினங்களும் என்னைப்பார்த்து பெருமைகொண்டது
வெட்டியே சரித்துவிட்டான்…. ஆறறிவுடைய மனிதன்.
அரைமணி நேரமாக மனஉலைச்சலை ஏற்படுத்திய போட்டோ இது…
எத்தனை தலைமுறைகளை பார்த்திருக்கும்…
எவ்வளவு இலை சருகுகளை விருந்திற்கும் மருந்திற்கும் வயல் உரத்திற்கும் கொடுத்திற்கும்…
எவ்வளவு பறவையினங்களை கூடுகட்ட மடி கொடுத்து ஆதரித்திருக்கும்…
இதன் கீழே எவ்வளவு ஜீவராசிகள் இளைப்பாறியிருக்கும்…
எத்தனை மனிதர்கள் வெயிலுக்கு ஒதுங்கியிருப்பார்கள்…
மரத்தை பார்த்தால் பட்டுபோனமாதிரியும் தெரியவில்லை
நிச்சயம் உயிருடன் உயிர்ப்புடன் இருந்த மரமே என தெரிகிறது…
அழிப்பது வெகு எளிது, நட்டு வளர்ப்பது கடினம் என இதனை வெட்டுபவர்கள் உணர வேண்டும்.