இரயில்வே செகந்திராபாத் தலைமை அலுவலகம்.
South Central Railway அதாவது தெற்கு மத்திய இரயில்வே செகந்திராபாத் தலைமை அலுவலகம்.
2018 வரை 45 கி.மீ சராசரி வேகத்தில் வாடி ரேணிகுண்டா வரை இயக்க பட்டதை இரயில் அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பயனாக மும்பை சென்னை இடையே 3 இரயிலையும் சூப்பர் பாஸ்ட் ஆக மாற்றி வேகத்தை கூட்டினார் கள். ஆனாலும் இன்னும் குண்டக்க ல் ரேணிகுண்டா வரை இரயில் மிகவும் குறைந்த வேகத்தில் தாமதமாக இயக்க படுவதாக மக்கள் கூறுகிறார்கள்.
2010 ல் Single track அதாவது ஒற்றை பாதை வழியாக 1280 கி.மீ தூரம் 18.மணி 30 நிமிடத்தில் ஒரு விசேஷ கரீப் ரதம் இரயில் இயக்க பட்டது.
அது மாத்திரம் அல்ல புதிய இரயில் தமிழகத்திற்கு மும்பையில் இருந்து இயக்க இந்த இரயில் வே அனுமதி அளிப்பது இல்லை என்றும் தகவல்கள் வருகின்றன.ஆகையால் மத்திய இரயில்வே மும்பையில் 2000 இரயில்கள் 3 நிமிட இடைவெளியில் 100 கி. மீ வேகத்தில் இயங்கும் போது இங்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. 130 கி. மீ வேக சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதையும் இரயில் அமைச்சக கவனத்திற்கு கொண்டு செல்ல படும். இந்தியாவில் 18 இரயில்வே Zones உள்ளன.
ஆனாலும் இரயில் அமைச்சகம் நேரடியாக தனி கவனம் ஒவ்வொரு கோட்டத்தின் மேலும் செலுத்த வேண்டும்.
இதற்கு ஒரு உதாரணம் 22157 மும்பை சென்னை மெயில் 27 மணி நேரம் 2018 வரை எடுத்தது. புகார் செய்த பிறகு வேகத்தை கூட்டி 4 மணி நேரம் குறைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.