தீவன தட்டுப்பாட்டால் புதன்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு
விலை சரிவு; ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம்
சேந்தமங்கலம் : கோடை வெயில் வறட்சி காரணமாக தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று புதன்சந்தையில் விற்பனைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து ரூ.2.50 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது.