ரூ.1.18 கோடி மோசடி செய்தவர் கைது

ஆவடி ஆனந்தா நகர், சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் காலித் முகமது(43). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது: கடந்த 2022ல், எனது பள்ளி பருவ நண்பரான, ஆவடி பல்லவன் நகரைச் சேர்ந்த பாண்டியராஜ்(43) என்பவருடன் சேர்ந்து பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறேன்.

அதன் மூலம் கிடைக்கும் பணத்தை இருவரும் பங்கிட்டு கொண்டோம். ஆரம்பத்தில் லாப பணத்தை சரியாக கொடுத்த பாண்டியராஜ், பிறகு என்னிடம் தொழில் செய்ய வாங்கிய பணம் மற்றும் எனது லாப பணம் ரூ.30 லட்சத்தை தராமல் ஏமாற்றினார். அதற்காக கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. அதேபோல், எனது ‘மாருதி ஐ 20 ஸ்போர்ட்ஸ்’ காரை, 17,000 வாடகை தருவதாக ஆசை வார்த்தை கூறி எடுத்து சென்றார். அதன் பின், 2 மாதம் 10,000 கொடுத்து ஏமாற்றினார்.