அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவிப்பு
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம்:
5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு மே 10 முதல் 31 வரை விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்டப் பல்கலை அறிவித்துள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலையுடன் இணைவுபெற்ற கல்லூரிகள், சீர்மிகு சட்ட பள்ளிகளில் 5 ஆண்டு படிப்புக்கு விண்ணப்பம் மே 10 ல் தொடங்கவுள்ளது. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளம் www.tndalu.ac.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். மூன்றாண்டு சட்டப்படிப்பு, முதுநிலை சட்ட மேற்படிப்பு சேர்க்கை தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.