முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபி -விளையாட்டு செயலா?
யாழ்ப்பாணம் முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபி என்பது விளையாட்டு செயலா? முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபி இடித்ததற்கு ஐரோப்பா உலகத்தமிழர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகி திருமதி சுகந்தி ரவீந்திரநாத் அவர்கள் யாழ் பல்கலைகழக மாணவர்கள் சார்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், எழுப்பப்பட்ட ” முள்ளி வாய்க்கால் நினைவுத் தூண்” கடந்த ஜனவரி 8ஆம் தேதி சிங்கள ராணுவத்தால் இடிக்கப்பட்ட பிறகு, அதைக்கண்டித்து, பல்வேறு போராட்டங்கள் , வடக்கிலும், கிழக்கிலும் இன்று (11-01-2021 )முழு கடையடைப்பும் நடத்தப்பட்டது. பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சாகும்வரை பட்டினிப்போர் தொடங்கி நடத்தி வந்தனர். பல போராட்டங்களுக்குப் பிறகு, மீண்டும் பல்கலைக்கழக வளாகத்தில், நினைவுத்தூண் எழுப்பப்பட இன்று காலை 7.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தற்போது நினைவு தூபியை மீண்டும் கட்டுவதற்கு துணைவேந்தர் மூலமாக அடிக்கல் நாட்டுவது வரவேற்கதக்கது ஆனாலும் இந்த செயல் ஒட்டுமொத்த தமிழர் சமூகத்தை அவமானபடுத்திய செயல் ஆகும். இனி வரும் காலங்களில் இந்த இழிவு செயலை யாருமே செய்ய முன் வரக்கூடாது என கோரிக்கை வைத்துள்ளனர். பல்கலை கழக மாணவர்கள் எழுச்சி இந்த உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஈழ தமிழர்கள் தாக்கப்பட்டாலோ அல்லது அவமான படுத்தபட்டாலோ உலக தமிழர்கள் ஒருங்கிணைப்பு குழு மூலம் நிச்சயம் எதிர்ப்பு கிளம்பும் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
பல்கலைக்கழக வளாகத்தில், நினைவுத்தூண் எழுப்பப்பட இன்று காலை 7.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மாணவர்களின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன் அடிக்கல்லும் நாட்டினார். இது தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களைப் பேணிப் பாதுகாக்கின்ற இடமுமாகும். அதுமட்டுமன்றி தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தின் சாட்சியாகவும் அதன் பரிணாம வளர்ச்சியோடும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்ற அறிவுசார் செயற்பாட்டுக் களமுமாகும். இனி தமிழர்கள் மீதும் அவர்களின் உணர்வுகளின் மீதும் தீண்டுவதற்கு யாருக்குமே எண்ணம் வரக்கூடாது என்பதை தனது கருத்தாக பதிவு செய்துள்ளார் திருமதி சுகந்தி ரவீந்திரநாத் வாழ்க தமிழ் ! வளர்க நிம்மதியுடன் !!!
செய்தி ரபி திருச்சி