தேடுதல் பணியில் மீட்பு படை தீவிரம்
பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு 70 பேர் மாயம்: தேடுதல் பணியில் மீட்பு படை தீவிரம்
தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு 29 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 39 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 70 பேர் மாயமாகி உள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.