வெயிலின் தாக்கம் அதிகரிப்பதை
வெயிலின் தாக்கம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மக்களுக்கு சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.
அவை பின்வருமாறு:
- வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
- காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம்.
- நீர்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
- அவசியமில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
- நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
- எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.
- பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.