கூட்டுறவு விற்பனை அங்காடி விற்பனையாளர் சஸ்பெண்ட்..!!
புத்தூர் அருகே சிந்தாமணி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலையின் விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பணி நேரத்தில் மது போதையில் இருந்ததாகவும், அநாகரிகமாக பேசியதாவும் விற்பனையாளர் நசுருதீன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
புகாரை அடுத்து நசுருதீனை தற்காலிக பணி நீக்கம் செய்து கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் துணைபதிவாளர் உத்தரவிட்டார்