கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி.

சேலம்
மேச்சேரி அருகே இன்று அதிகாலை புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி. மேட்டூர் அனல் மின்நிலைய குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயக்குமார். மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி (53). இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தொழிலாளர் நல அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களது மகன் புகழ்ஒளி (22). பொறியியல் பட்டப்படிப்பு படிக்குறார். இவர்கள் காரில் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி நான்கு ரோட்டில் இன்று அதிகாலை வேகமாக வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த புளிய மரத்தில் பலமாக மோதியது. தமிழரசி, மற்றும் மகன் புகழ்ஒளி உயிரிழந்தனர்.