பொய் பொய்யாய் பேசும் அண்ணாமலைக்கு, ஒரு ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்:
பொய் பொய்யாய் பேசும் அண்ணாமலைக்கு, ஒரு ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்: முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்
உலகத்திலேயே ஒரு மகா பொய்யன் என்றால், அண்ணாமலைதான் என்று சொல்லணும். கொஞ்சம் கூட கூச்சம் அச்சம் இல்லாமல் பொய் பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி என்பது அண்ணாமலைக்கு கண்டிப்பாக தெரியும். இதனை தெரிந்துகொண்டு 1 லட்சம் ஓட்டு காணவில்லை எனக் கூறுகிறார். இதனால், 1 லட்சம் ஓட்டு காணவில்லை என அண்ணாமலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் விரல்களிலும் ஓட்டு போட்டதற்கான மை இருக்கிறது. இது நம்ப முடிகிறதா என பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்த தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் சொதப்பிவிட்டது என்றார்.