ஆத்ம திருப்தியும், இறைவன் கொடுத்த பாக்கியம்..
தமிழ்மலர் மின்னிதழ் ஜன-11
ரவிந்திரநாத் சுகந்தி அறக்கட்டளை
R.S.அறக்கட்டளை மதுரையில் துவங்கப்பட்டு தற்பொழுது விருது நகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரின் அருகே பாளையம்பட்டி எனும் கிராமத்தில் விநாயகர் கோவில் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த அறக்கட்டளைகளுக்கு தலைமை மேலாளராக திரு.வே.ரவிந்திரநாத் அவர்களும், துணை தலைமை மேலாளராக திருமதி.சுகந்தி ரவிந்திரநாத் அவர்களும், மற்றும் இலவச சட்ட ஆலோசகராக திரு.த.விஜய் பாண்டியன் அவர்களும் நடத்தி வருகின்றனர்.
இங்கு தினமும் 30க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இவர்கள் 70 முதல் 90 வயது நிரம்பிய முதியோர்களாவார்கள். இவர்களுக்கு உடை, யோகா, இலவச மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகின்றது. சிறுவர்களுக்கான இலவசக்கல்விகள், உயர்கல்விச் சேர்க்கை, இலவச மனோதத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் சேவைக்கு, தமிழக அரசின் மாவட்ட ஆட்சியர், கிராம நிர்வாக அதிகாரிகளும், காவல்துறையும், தங்களது பாராட்டையும், ஆதரவையும் வழங்கி வருகின்றனர்.
திருமதி.சுகந்தி ரவீந்திரநாத் அவர்கள் கூறுகையில், நான் தனது நடன வகுப்பில் வரும் வருமானத்தையும்,தனது கணவரின் குடும்ப வருமானத்தையும் செலவழித்து தன்னால் முடிந்ததை செய்ய முடிகிறது. இப்படி சமூகத்தில் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு வழங்கினால் பலபேர் பயன்பெறுவர். இந்த சமூகப்பணியில் தான் செய்து வருவதில், மிக ஆத்ம திருப்தியும், இறைவன் தனக்கு கொடுத்த பாக்கியம் என்று கூறுகின்றார். இன்னும் பலநூறு பேருகளுக்கு மேல் உணவளிப்பதே தனது லட்சியம் என்று கூறி வருகிறார். ஓவ்வொரு முதியோருக்கும் மாதம் 2 பேருக்கு பிறந்தநாளும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அறக்கட்டளை சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ள தன்னார்வலர்களுக்கும் பொருள் உதவி செய்த நண்பர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் தங்களது அறக்கட்டளையை நிறுவ முயற்சி செய்து வருகின்றனர். தன்னார்வலர்கள் இணைய வரவேற்கப்படுகின்றனர்.
தொடர்புக்கு– RaviSuganthitrust@gmail.com