சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருவனந்தபுரம், கோட்டயம், கோவை, சேலம் வழியாக இயக்கம்.

கோடைகாலத்தை முன்னிட்டு நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் இடையே கேரளா, கோவை, சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு ;

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து மே 5 மற்றும் 19ம் தேதிகளில் மாலை 5.45க்கு புறப்படும் சிறப்பு ரயில்(06019) மறுநாள் பகல் 12.10க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

இதே போல் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்துமே 12 மற்றும் 26ம் தேதிகளில் மாலை 5.45க்கு புறப்படும் சிறப்பு ரயில்(06021) மறுநாள் பகல் 12.10க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மே 6 மற்றும் மே 20ம் தேதிகளில் மாலை 3.10க்கு புறப்படும் சிறப்பு (06020)ரயில் மறுநாள் காலை 8.30க்கு நாகர்கோவில் வந்து சேரும்.

இதே போல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மே 13 மற்றும் 27ம் தேதிகளில் மாலை 3.10க்கு புறப்படும் சிறப்பு (06022)ரயில் மறுநாள் காலை 8.30க்கு நாகர்கோவில் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

கோடைக்கால விடுமுறையொட்டி சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.35கு புறப்படும் சிறப்பு ரயில்(06012) மறுநாள் காலை 4.10க்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரயிலின் இறுதி சேவை மே 26ம் தேதி ஆகும்.

மறு மார்க்கத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திங்கட்கிழமைகளில் காலை 7.45க்கு புறப்படும் சிறப்பு ரயில்(06011) அன்றைய தினம் இரவு 8.25க்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயிலின் இறுதி சேவை மே 27ம் தேதி ஆகும்.

கொச்சுவெளி – பரவுனி இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி(வேலூர்), சென்னை பெரம்பூர் வழியாக சிறப்பு ரயில்

கொச்சுவெளி – பரவுனி இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி(வேலூர்), சென்னை பெரம்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி கொச்சுவெளியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 8மணிக்கு புறப்படும் 06091 பரவுனி சிறப்பு ரயில், திங்கட்கிழமைகளில் பகல் 2.30க்கு பரவுனி சென்றடையும். இந்த ரயிலின் கடைசி சேவை ஜூன் 29ம் தேதி ஆகும்.

மறு மார்க்கத்தில் பரவுனி ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய்கிழமைகளில் இரவு 11.30க்கு புறப்படும் 06092 கொச்சுவெளி சிறப்பு ரயில், வெள்ளிக்கிழமைல்களில் பகல் 1.30க்கு கொச்சுவெளி வந்து சேரும். இந்த ரயிலின் கடைசி சேவை ஜூலை 2ம் தேதி ஆகும்.

தமிழகத்தில் இந்த ரயில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.