ஜெயக்குமார் பேட்டி
யானை பசிக்கு சோளப் பொறி போல் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதி அளிக்கிறது:
யானை பசிக்கு சோளப் பொறி போல் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு நிதி அளிக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சர் பிட்டி தியாகராயரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சர் பிட்டி தியாகராயர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஒன்றிய அரசு குறைவாக நிதி அளித்துள்ளது. தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டுக்கு பிரயோஜனம் இல்லை என தெரிவித்தார்.