அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழாவின் ஒன்பதாம் நாளான இன்று ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வீரராகவ பெருமாளுக்கு தீர்த்தவாரி திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.