இளைஞர் தவறி விழுந்து மரணம்
வெள்ளியங்கிரி மலையில் சித்திரா பவுர்ணமியையொட்டி ஆன்மிக பயணம் மேற்கொண்ட இளைஞர் தவறி விழுந்து மரணம்
வெள்ளியங்கிரி மலையில் பவுர்ணமியையொட்டி ஆன்மிக பயணம் மேற்கொண்ட இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தார். வெள்ளியங்கிரி ஏழாவது மலையிலிருந்து தவறி விழுந்த இளைஞர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வீரகுமார் வயது 31 இவர் கடந்த 18ம் தேதி தனது நண்பர்களுடன் கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மலையேற்றத்தில் ஏறி இருந்தார். அப்போது ஏழாவது மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து கீழே இறங்கும் போது கால் தவறி விழுந்தார்.
இதில் காயமடைந்த அவருக்கு கால், கழுத்து, வயிறு, நெஞ்சுமார்பகம் போன்ற இடங்களில் படுகாயம் ஏற்ப்பட்டது . காயமடைந்தவரை அவரது நண்பர்கள், வனத்துறையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலைப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் 5க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல் மற்றும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர். இந்த நிலையில் சாமி தரிசனம் செய்து கீழே வரும் போது கால் தவறி விழுந்த இளைஞர் மரணம் அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.