ஆணவக்கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி கடிதம்.
“என் தற்கொலைக்கு குடும்பத்தினரே காரணம்”: ஆணவக்கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி கடிதம்.
ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் வெளியானது. தனது தற்கொலைக்கு பெற்றோரும், சகோதரர்களுமே காரணம் என கடிதத்தில் ஷர்மிளா குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 14ம் தேதி தற்கொலைக்கு முயன்ற ஷர்மிளா நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பெற்றோர் துரை, சரளா, சகோதரர்கள் நரேஷ், தினேஷ் ஆகியோரது பெயர்களை கடிதத்தில் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.