மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊரில் ஜனநாயக கடமையாற்றிய வெளிநாடு வாழ் தமிழர்கள்.
பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்திருக்கும் அதேவேளையில், வெளிநாடுகளில் பணிபுரியும் பலரும், பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊருக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி முன்மாதிரியாக திகழ்ந்துள்ளனர். அமெரிக்காவின் சிகாகோ நகரில் பணியாற்றி வரும் சிவகுமார், தனது சொந்த ஊரான மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர் அருகே உள்ள கிராமத்தில் வாக்களித்தார். ஐ.டி.ஊழியரான இவர், 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். எனினும் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் தாயகம் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்.