தேஜஸ்வி யாதவ் விமர்சனம்
400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்துவிட்டது:
400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்துவிட்டது என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 18வது மக்களவை தேர்தல் நேற்று முதல் தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் உள்பட 102 தொகுதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவின் மலை அளவு பொய்களும், அறிக்கைகளும் சரிந்துவிட்டதாக விமர்சனம் செய்தார்.