விஜயவாடாவில் மருத்துவக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடிக்கு மருந்துகள் சேதம்
ஆந்திர மாநிலம் விஜயவாடா பந்தர் தெருவில் உள்ள மருத்துவக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. ரூ.5 கோடிக்கு மருந்துகள் சேதமடைந்தது. மருந்து கிடங்கில் ஏற்பட்ட தீயை 5 வாகனங்களில் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் அணைந்தனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் காயங்களோ உயிர்சேதமோ ஏற்படவில்லை எனவும் தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.