துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு நேற்று துறையூர் நகரில் முசிறி பிரிவு ரோடு, பேருந்து நிலையம், திருச்சிசாலை, பெரிய கடை வீதி, சிலோன் ஆபிஸ், உயர்நிலைப் பள்ளி சாலை, மார்க்கெட் வழியாக பாலக்கரை பகுதி வரை ரோடு ஷோ நடத்தினார். இறுதியாக துறையூர் பாலக்கரையில் பிரசாரத்தை நிறைவு செய்து பேசிய வேட்பாளர் அருண்நேரு, துறையூரில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சின்ன ஏரி தூய்மை செய்தல், பச்சமலை சாலையை இருவழிச்சாலையாக அகலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு நேற்று துறையூர் நகரில் முசிறி பிரிவு ரோடு, பேருந்து நிலையம், திருச்சிசாலை, பெரிய கடை வீதி, சிலோன் ஆபிஸ், உயர்நிலைப் பள்ளி சாலை, மார்க்கெட் வழியாக பாலக்கரை பகுதி வரை ரோடு ஷோ நடத்தினார். இறுதியாக துறையூர் பாலக்கரையில் பிரசாரத்தை நிறைவு செய்து பேசிய வேட்பாளர் அருண்நேரு, துறையூரில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சின்ன ஏரி தூய்மை செய்தல், பச்சமலை சாலையை இருவழிச்சாலையாக அகலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக கூறி தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், எம்எல்ஏ ஸ்டாலின்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி, நகர்மன்றத் தலைவர் செல்வராணி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சிவ சரவணன், முத்துச்செல்வன், அசோகன், துறையூர் ஒன்றியக்குழுத் தலைவர் சரண்யா மோகன்தாஸ் உள்பட கூட்டணிக் கட்சியினர் உடன் சென்றனர்.