சிவில் சர்வீஸ் – தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த மருத்துவர்.
சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 78ஆவது இடமும், தமிழ்நாட்டில் முதலிடமும் பிடித்துள்ளார் சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர் பிரசாந்த்.
2022ஆம் ஆண்டு MBBS முடித்த பிரசாந்த், 8 மாதங்களில் சொந்த முயற்சியில் படித்து முதல்முறையிலேயே தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்து அசத்தல்.