விசாகப்பட்டினம் – கொல்லம் இடையே காட்பாடி
விசாகப்பட்டினம் – கொல்லம் இடையே காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலம் அறிவித்துள்ளது.
வண்டி எண் 08539 விசாகப்பட்டினம் – கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஏப்ரல் 17, 24, மே 1, 8, 15, 22, 29, ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3ம் தேதிகளில் புறப்படும்.
மறு மார்க்கத்தில் வண்டி எண் 08540 கொல்லம் – விசாகப்பட்டினம் வாராந்திர சிறப்பு ரயில், கொல்லத்தில் இருந்து ஏப்ரல் 18, 25, மே 2, 9, 26, 23, 30, ஜூன் 6, 13, 20, 27 மற்றும் ஜூலை 4ம் தேதிகளில் புறப்படும்.