குரு திசை மற்றும் குரு பார்வை

பெரும்பாலோர்க்கு குரு தசா நற்பலனை அளிப்பதில்லை.
குரு தனியாக இருக்கும் போது
ஆயிரத்தில் ஒருவருக்கு
வேறு அமைப்பின் காரணமாக நன்மை ஏற்பட்டிருக்கலாம்.

குரு தசா 6வது தசாவாக வரும் போது
பெரும்பாலோர்க்கு மாரகம் ஏற்பட்டுவிடுகிறது.

அறிஞர் அண்ணா அவர்கள்
கடக லக்னம்.
குரு தசா 6வது தசாவாக ஏற்பட்ட பொழுதுதான் மாரகம் ஏற்பட்டது.

குரு பார்வை பெற்றால் நன்மைகள் ஏற்படுகிறது

  1. கிரகங்கள் நீசம் பெற்றிருந்தாலும்
    குரு பார்வை பெற நற்பலன் விளைவதை பார்க்கலாம்.
  2. குருவின் பார்வையால் தான் ஆயுள் பலம் அதிகம் பெறுகின்றனர்.
  3. சனி ஆயுள்காரகன் என்பது உண்மை. ஆனால் அந்த ஆயுள்காரகன்
    சனியை குரு பார்த்தால்
    ஆயுள் இன்னும் தீர்கம் ஆகிறது.
  4. ஒருவன் வாழ்வில் யோகம் அடைவதென்றால்
    ஒன்று ராகு அல்லது சனி
    அல்லது கேது அல்லது செவ்வாய் தசாவில்தான் அடையமுடியும். ஆனால்
    இவர்களை குரு பார்த்திருக்க வேண்டும்.
  5. சுக்கிரனுடன் குரு சேர்ந்து இருக்கக் கூடாது
  6. குரு சுக்ரன் சேர்க்கை, குரு சுக்ரன்
    பார்வை இருந்தாலும்
    தாம்பத்ய வாழ்க்கை
    சுகப்படுவதில்லை. அதாவது கணவன் மனைவி உறவு
    நீடிப்பதில்லை.
  7. ஆண் ஜாதகத்தில் மேற்கண்ட அமைப்பு
    சிலருக்கு ஒரு தாரம் இருக்கையில்
    இரண்டாவதை ஏற்படுத்துகிறது.
  8. குருவுக்கு கேந்திர ஆதிபத்யமோ
    குரு 3,6,8,12ல் இருந்து தசா நடந்தால் கஷ்டம் நஷ்டம்
    மிக மிக அதிகம்.
  9. குரு நீசம் பெற்றால் மட்டும், நல்லது
    கெட்டது கலந்தே நடக்கும்.
    கெடுதல் கூடுதலாக
    இருக்கும்.
  10. குரு தசாவில் சிலருக்கு பொருளாதார
    பாதிப்பு அல்லது உடல் பாதிப்பு ஏற்படுகிறது.

Astro Selvaraj Trichy :
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்