உலகப் பாவை தொடர் 10
10. பகைவெறி அழிக
ஓர்மக்கள் உலகோர் என்னும் ஒருமையுணர் வெழுமே
யானால்,
போர்க்கருவி அனைத்தும் பண்டைப்
பொருட்காட்சி யகமே நாடும்;
பார்முழுதும் பகைமை என்னும்
பாழுணர்வு மறையு மானால், ஊர்ந்தழிக்கும் கருவி எல்லாம்
உலைக்களத்தில் உருக
நிற்கும்;
ஆர்க்கின்ற பிரிவி னைகள் அடக்கப்பட்டு மானால், மண்ணைச்
சீர்குலைக்கும் சிந்த னைக்குச் செல்வயிரே காப்பாய் மாறும்;
போர்கொண்ட உலகை மாற்றிப்
புதியதொரு உலகைக் காண ஓர்மைநெறி தேர்ந்து கூறி
உலாவருவாய் உலகப் பாவாய்!
பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்