அன்புமணி விமர்சனம்
ஆட்சிக்கு வராத போது எதை வேண்டுமானாலும் தேர்தல் வாக்குறுதியாக கூறலாம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து அன்புமணி விமர்சனம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேலூரில் அளித்த பேட்டி வருமாறு:
காங்கிரஸ் ஆட்சிக்கு வரப்போவது கிடையாது. காங்கிரசின் தேர்தல் அறிக்கை வெறும் அறிக்கை மட்டும்தான். இந்தியாவில் நீட் தேர்வு வருவதற்கு காரணமே காங்கிரசும் திமுகவும் தான். இரு கட்சிகளும் சேர்ந்து தான் இவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். திமுகவும் ஒரு வாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம். மூன்று மாதத்தில் ரத்து செய்வோம் என்று கூறி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வராத போது எதை வேண்டுமானாலும் தேர்தல் வாக்குறுதியாக கொண்டு வரலாம்; குறிப்பிடலாம். திமுக கடந்த தேர்தல்களில் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளார்களா? அதேபோலத்தான் தற்போது காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையும்… அது வெறும் தேர்தல் அறிக்கை மட்டும் தான்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு உள்ள நட்பை வைத்து பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி நிச்சயம் கொண்டு வருவோம்.
மக்கள் இரு திராவிட கட்சிகளையும் ஒதுக்கி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க போகிறார்கள். ஏனெனில் மக்கள் வெறுப்பில் உள்ளார்கள். அதோடு கோபத்தில் உள்ளார்கள். மக்கள் அதிமுகவின் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர். அதிமுக நான்காக பிரிந்து இருக்கிறது. என்றார்.