பெரம்பலூர் மக்களவை தொகுதி மக்களவை தொகுதி ஒரு பார்வை

தொகுதி சீரமைப்புக்கு பின் குளித்தலை, லால்குடி, மண்ணச்சன்னல்லூர், முசிறி, துறையூர்(தனி), பெரம்பலூர்(தனி) ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது பெரம்பலூர் மக்களவை தொகுதி.

திருச்சியின் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் இந்த தொகுதியில்தான் அடங்கியள்ளது.

திமுக இங்கே 8 முறை வென்றுள்ளது. அதிமுகவும் ஐந்து முறை வென்றிருக்கிறது.

ஆ.ராசா மூன்று முறை இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக அசோகராஜாவும் மூன்று முறை பெரம்பலூரின் எம்.பி ஆக இருந்துள்ளார்.

தனித் தொகுதியான பெரம்பலூர் பெரும்பாலும் திமுக – அதிமுக இரு கட்சிகளின் கையிலேயே இருந்திருக்கிறது. கடந்த 2014 தேர்தலில் பாஜக கூட்டணி குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றது. அக்கூட்டணி சார்பாக ஐ ஜே கே கட்சியின் நிறுவனர் இந்த தொகுதியில் நின்று இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.

இம்முறை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐ ஜெ கே கட்சிக்கு பெரம்பலூர் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பெரம்பலூர் மக்களவை தொகுதியின் வரலாறு

  1. முதல் மக்களவை தேர்தலில் பெரம்பலூரில் 62.87% வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது.தமிழ்நாடு உழைப்பாளிகள் கட்சி இந்த மக்களவை தேர்தலில் நான்கு இடங்களில் வென்றிருந்தது. அதில் பெரம்பலூர் தொகுதியும் ஒன்று. பெரம்பலூரில் இக்கட்சி சார்பில் போட்டியிட்ட பூரங்கசுவாமி படையாச்சி 37.34 % வாக்குங்கள் பெற்றிருந்தார். இந்த தேர்தலில் இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள் முறையே 17.52% மற்றும் 16.17% வாக்குகளை பெற்றிருந்தனர்.
  2. 1957 மக்களவை தேர்தலில் பெரம்பலூரில் 52.15% வாக்குகள் பதிவானது. வன்னியர்களை பிரதானமாக கொண்ட தமிழ்நாடு உழைப்பாளிகள் கட்சி சார்பில் முதல் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்ற பூவரங்கசுவாமி இம்முறை சுயேச்சையாக போட்டியிட்டார். ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளரிடம் மிகப்பெரிய தோல்வியை தழுவினார். பதிவான வாக்குகளில் சுமார் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் காங்கிரஸ் வேட்பாளர் பழனியாண்டி.
  3. 1962-ல் மத்திய தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றி கிடைத்த ஒரே மக்களவை தொகுதி இதுதான். 1957 தேர்தலில் வென்ற பழனியாண்டி இம்முறை திமுக வேட்பாளர் இரா செழியனிடம் தோற்றுப்போனார்.

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 73.70% வாக்குகள் பதிவாகியிருந்தது. திமுக வேட்பாளர் பதிவான வாக்குகளில் 55.90% வென்றார்.

  1. 1967 மக்களவை தேர்தலில் பெரம்பலூரில் பதிவான வாக்குப்பதிவு 81.69%. திமுக மீண்டும் பெரம்பலூரில் வென்றது. இம்முறை திமுக வேட்பாளர் பதிவான வாக்குகளில் 53.97% வென்றார். காங்கிரஸ் வேட்பாளர் ராமசுவாமி சுமார் 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்

தோற்றுப் போனார்.

  1. பெரம்பலூர் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக திமுக வென்றது. 1971 தேர்தலில் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 61 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் துரையரசு. இத்தேர்தலில் 79.31% வாக்குகள் பதிவானது.

பெரம்பலூர் மக்களவை தொகுதி

  1. அதிமுக 1977 மக்களவை தேர்தலில் தனித் தொகுதியான பெரம்பலூரை கைப்பற்றியது. மூன்று முறை தொடர்ந்து வென்ற திமுக இத்தேர்தலில் 30% வாக்குகள் மட்டுமே பெற்றது. அதிமுக வேட்பாளர் அசோகராஜ் சுமார் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ராஜூவை தோற்கடித்தார். இத்தேர்தலில் 72.31% வாக்குகள் பதிவானது.
  2. கே.பி.எஸ் மணி 1980 மக்களவை தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா) கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டு லட்சத்து 82 ஆயிரம் ஓட்டுகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்கராஜு மணியை விட 99,172 வாக்குகள் குறைவாக பெற்றார். இத்தேர்தலில் 70.61% வாக்குகள் பதிவானது.
  3. எட்டாவது மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 1,53,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தியாகராஜனை வென்றார். இத்தேர்தலில் 77.04% வாக்குகள் பதிவாகியிருந்தது. பதிவான ஐந்தரை லட்சம் வாக்குகளில் மூன்றரை லட்சம் வாக்குகள் தங்கராஜூவுக்கு விழுந்தது.
  4. 1989 மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் 72.25% வாக்குகள் பதிவாயின. திமுக வேட்பாளரை விட ஒரு லட்சத்து முப்பத்து ஐந்தாயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று அதிமுக வேட்பாளர் அசோகராஜ் வெற்றி பெற்றார்.
  5. பத்தாவது மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் அசோகராஜ் திமுக வேட்பாளரை 1.95 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். பாமக சார்பில் போட்டியிட்ட சிவஞானமணி 77ஆயிரம் வாக்குகள் பெற்று கவனம் ஈர்த்தார். இந்த தேர்தலில் 70.69% வாக்குகள் பதிவாயின.
  6. 1996 தேர்தலில் ஆ. ராசா திமுக சார்பில் போட்டியிட்டு 59.19% வாக்குகளை பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 2.15 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். பெரம்பலூரில் மதிமுக 7.98% வாக்குகளையும் பாஜக 1.15% வாக்குகளையும் பெற்றது. இந்த தேர்தலில் 73.50% வாக்குகள் பதிவானது.
  7. ஆ. ராசா 1998 மக்களவை தேர்தலில் 60,436 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இம்முறை 54.56% வாக்குகள் பதிவானது. முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது வாக்குபதிவில் பெரும் சரிவு ஏற்பட்டிருந்தது.
  8. ஒரே ஆண்டில் மீண்டும் பெரம்பலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினரானார் ஆ.ராசா. அதிமுகவின் ராஜ ரத்தினத்தை சுமார் 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் பெரியசாமி 85 ஆயிரம் வாக்குகள் பெற்றார். முந்தைய தேர்தலை விட இம்முறை அதிக வாக்குகள் (65.40%) பதிவானது.
  9. 2004 தேர்தலில் மீண்டும் ஆ. ராசா பெரம்பலூர் தொகுதியில் வென்று மக்களவை உறுப்பினரானார். அதிமுக வேட்பாளரை விட அவர் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாக பெற்றார். ஒன்றுபட்ட ஜனதா தள வேட்பாளர் கணேசன் 47 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.
  10. 2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக நின்ற நெப்போலியன் வென்றார். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மற்றும் அதிமுக வேட்பாளரிடையேயான வாக்கு வித்தியாசம் 77 ஆயிரம். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரான செல்வராஜ் ஐந்தாயிரம் வாக்குகள் பெற்றார். தேமுதிக சார்பில் நிறுத்தப்பட்ட காமராஜ் துறை 74,281 வாக்குகள் பெற்றார். அதாவது தேமுதிக 7.08% வாக்குகள் பெற்றது.
  11. கடந்த 2014 மக்களவை தேர்தலில் பெரம்பலூரில் 10.3 லட்சம் ஓட்டுகள் பதிவாயின. இதில் அதிமுக 4.62 லட்சம் ஓட்டுகள் பெற்று வென்றது. மருதராஜா திமுக வேட்பாளர் சீமானுர் பிரபுவை 2.13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். தாமரை சின்னத்தில் களமிறங்கிய பச்சமுத்து 2.38 லட்சம் வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 31,998 வாக்குகள் பெற்றது

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், 62 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். பாரிவேந்தர் 6,83, 697 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதி 2,80,179 வாக்குகள் பெற்று, 4.03 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

சர்க்கரை ஆலை, தொழிற்சாலைகள், கட்டுமானப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் என நிறைந்திருந்தாலும், சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளில் ரயில் சேவையை கண்டிடாத ஒரே மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம். தமிழ்நாட்டின் 25வது மக்களவைத் தொகுதியான பெரம்பலூரில் பெரம்பலூர், குளித்தலை, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதியில்
தொழில் பூங்காக்கள் இல்லாததால் வேலைவாய்ப்பு கிடைக்காமல் பெருநகரங்களை நோக்கி இளைஞர்கள் படையெடுப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.

முசிறி தொகுதியில் வாழை ஏற்றுமதி மண்டலம் உறுதியளித்து செயல்படுத்தாது, குளித்தலை சுங்க ரயில் மேம்பாலம் அமைக்காததும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாயனூர் கதவணையில் இருந்து பரங்கிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவதாக கூறிய வாக்குறுதியும் கானல் நீராகிவிட்டதாக கூறப்படுகிறது. பாரம்பரியமிக்க மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி வகையை மீட்க நடவடிக்கை எடுக்காதது, காவரி ஆற்றில் இருந்து தாத்தையங்கார்பேட்டை வரை தண்ணீர் கொண்டுசெல்ல நடவடிக்கை இல்லை

இப்போது
திமுக-அருண் நேரு

ஐ.ஜே.கே-பாரிவேந்தர்

அதிமுக-சந்திரமோகன் போட்டியிடுகிறார்கள்