அ.தி.மு.க.வின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம்
முதலமைச்சர் பழனிசாமி பேச்சு. ஊழல் குற்றச்சாட்டு குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: அ.தி.மு.க.வின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் மற்றும் பல அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின் சட்டசபை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
- என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும், பொதுக்குழுவுக்கும் நன்றி
- ஏப்ரல்,மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
- இனிவரும் காலங்களில் சிறப்பாக பணியாற்ற உறுதி ஏற்போம்
*ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றினால் தான் வெற்றியை அடைய முடியும்
*உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி அதிமுகவை வீழ்த்த முடியாது
*திட்டம் போட்டு தேர்தலை சந்தித்தால் வெற்றி உறுதி
*திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன
- ஊழல் குற்றச்சாட்டு குறித்து ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க தயார்
என தெரிவித்தார்.
ரஹ்மான். செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ்.