கள்ளழகர் திருவிழாவில் போதிய பாதுகாப்பு வசதி, அடிப்படை தேவைகளை செய்து தர ஐகோர்ட் கிளை ஆணை

கள்ளழகர் திருவிழாவில் போதிய பாதுகாப்பு வசதி, அடிப்படை தேவைகளை அரசு தரப்பில் செய்து தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. சித்திரை திருவிழாவின்போது கள்ளழகரை சாதி ரீதியான, தனியார் மண்டகப்படிகளுக்கு கொண்டு செல்ல தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மானகிரி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.