தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி
தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
கரூர் பரமத்தி, தருமபுரி, சேலம் ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது.
திருச்சி, வேலூர், திருத்தணி, மதுரை நகர், மதுரை விமான நிலைய பகுதிகளில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது