திண்டுக்கல் மதுவிலக்கு
திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரபாண்டியன்,திண்டுக்கல் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் டாஸ்மாக் உதவி மேலாளர் மற்றும் மதுவிலக்கு போலீசார் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அதில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 7 பேரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 155 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது