நீலகிரி உதகையில் அதிமுகவினருக்கும்

நீலகிரி உதகையில் அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு ஊர்வலத்தின் போது எஸ்.பி. வாகனத்தை அதிமுகவினர் தாக்கினர். பாஜகவினர் ஊர்வலம் சென்றதால் சற்றுநேரம் கழித்து செல்லுமாறு போலீசார் அதிமுகவினரிடம் கூறியுள்ளனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்றவர்களை தடுத்ததால் அதிமுகவினருக்கும் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.