உலகப் பாவை – தொடர் 9
- ஒன்றி வாழும்
பிறப்பே பிறப்பு
பிறப்பினிலே உயர்வு தாழ்வு
பிழைமனத்தார் பிதற்றல்; நெஞ்சம்
சிறக்குமெனில் பிரிப்பிற் கிங்கே
சிறிதிடமும் இல்லை; மாந்தர்
பிறப்பதொரு முறைதான்;
அந்தப்
பிறப்பினிலே ஒன்றி வாழும் பிறப்புகளே பிறப்பு; மற்ற பிறப்பெலாம்வீண் பிறப்பே ஆகும்.
பிறக்குமுயிர் இறப்ப துண்மை, பிறந்திறக்கும் முன்னே அந்த
இறப்பிற்கும் இறப்பை வைப்போர்
இணைப்பிற்கு வழியை வைப்போர்,
உறவிலுயர் ஒருமைப் பாட்டை உலவச்செய் திடுவோர், என்ற மறைமொழியை விளக்கிக்
கூறி
வலம்வருவாய் உலகப் பாவாய்!
பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்