கிளாம்பாக்கம் பேருந்து நிலைய மெட்ரோ
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையான மெட்ரோ ரயில் திட்டம் மேலும் தாமதமாகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய மெட்ரோ
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தில் பெற்ற ஆர்டிஐ-யில் தகவல்
மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோவுக்கு இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை
2022ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை ஒப்புதலை அளித்த போதும், 16 மாதங்கள் ஆகியும் கிளாம்பாக்கம் மெட்ரோவுக்கு நிதி ஒப்புதலை தமிழக அரசு வழங்காததால் தாமதம்
கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கான நிதி ஒப்புதல் விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த பட்ஜெட்டில் தெரிவித்தது
ஆர்டிஐ தகவலின்படி தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இதுவரை சென்னை கிளாம்பாக்கம் மெட்ரோவுக்கான நிதி ஒப்புதலை தமிழக அரசு வழங்கவில்லை