13 அதிகாரிகளை இடமாற்றம்

13 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில் 5 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி பணியிடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளது..

  1. சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக இருந்த தேன்மொழி தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஐஜியாக மாற்றம்.
  2. அரக்கோணம் ஏஎஸ்பியாக இருந்த யாதவ் கிரிஷ் அசோக் பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றம்.
  3. உத்தமபாளையம் ஏஎஸ்பியாக இருந்த மதுகுமாரி பதவி உயர்வு பெற்று மதுரை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றம்.
  4. காரைக்குடி ஏஎஸ்பியாக இருந்த ஸ்டாலின் பதவி உயர்வு பெற்று கோவை நகர வடக்கு பிரிவின் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மாற்றம்.
  5. திருவள்ளூர் ஏஎஸ்பியயாக இருந்த விவேகானந்த சுக்லா பதவி உயர்வு பெற்று திருச்சி நகர வடக்கு பிரிவு துணை ஆணையராக மாற்றம்.
  6. அருப்புக்கோட்டை ஏஎஸ்பியாக இருந்த கரட் கருண் உத்தவ்ராவ் பதவி உயர்வு பெற்று மதுரை நகர தெற்கு பிரிவு துணை ஆணையராக மாற்றம்.
  7. திருச்சி நகர துணை ஆணையராக இருந்த அன்பு சென்னை ரயில்வே காவல்துறை எஸ்பியாக மாற்றம்.
  8. திருப்பூர் நகர தெற்கு பிரிவு துணை ஆணையராக இருந்த வனிதா தமிழக காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறையின் எஸ்பியாக மாற்றம்.
  9. தமிழக காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறையின் எஸ்பியாக இருந்த ரமேஷ் பாபு சென்னை காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறையின் துணை ஆணையராக மாற்றம்.
  10. சென்னை காவல்துறை நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக இருந்த மகேஷ்வரன் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக மாற்றம்.
  11. கோவை நகர வடக்கு பிரிவு துணை ஆணையராக இருந்த ரோகித் நாதன் ராஜகோபால் கோவை நகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மாற்றம்.
  12. மதுரை நகர தெற்கு பிரிவு துணை ஆணையராக இருந்த பாலாஜி தமிழக காவல்துறை நலன் பிரிவு உதவி ஐஜியாக மாற்றம்.
  13. நாகை கடலோர பாதுகாப்பு குழுமத்தின் எஸ்பியாக இருந்த அதிவீர பாண்டியன் சென்னை காவல்துறை நிர்வாகப்பிரிவின் துணை ஆணையராக மாற்றம்